கவிஞர் ஆரிசன் – தற்குறிப்பு விவரம
______________________________________________
பெயர் : ஆரிசன்
இயற்பெயர் : ஆ.பெருமாள்
கல்வித்தகுதி : ஏம்.ஏ.,எம்.சி.ஜே.டி.கோப்.டி.ஏ.எஸ்.சி.,
எம்.பில்
பணி : முதுநிலைகணக்கீட்டுஅலுவலர், (ஓய்வு)
தமிழ்நாடு மின்உற்பத்திமற்றும் பகிர்மானகழகம்(தமிவா),
மேற்பார்வைபொறியாளர் அலுவலகம்,
திருவண்ணாமலை.
இல்லத்தரசி : திருமதி. ந.அமுதா,எம்.ஏ,எம்.ஃபில்.,பி.எட்,
தலைமை ஆசிரியை,
ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி,
வந்தவாசி.
மக்கட்பேறு : பெ.கோபிசிவராமன்,எம்.இ., (இசிஇ)
பெ.மோகனசெல்வசுர்ஜித்,எம்.இ.(இயந்திரவியல்)
பெற்றோர் பெயர் : சே.சு.ஆரிமுத்து | திருமதி. ஆ. சாவித்திரியம்மாள்
எழுதிய நூல்கள் : குளத்தில் மிதக்கும் தீபங்கள் (குறும்பா)|நட்சத்திர தாகம் (குறும்பா)|உயிர் நிலம் (புதுக்கவிதை)|மயிலிறகின் முத்தம் (குறும்பா)|பாடும் சின்னப் பறவைகளே (குழந்தைப் பாடல்கள்)|புல் வெளியின் ரகசியம் (குறும்பா)|காற்றில் மிதந்த மொழி (பாடல்)| மின்சாரப் பூக்கள் (புதுக்கவிதை)|வேட்கையின் நிழல் (புதுக்கவிதை)|பள்ளிக்கூட மைனாக்கள் (குழந்தைப் பாடல்கள்)|உழைப்பின் நிறம் கருப்பு (ஹைக்கூ)|மூங்கில் தவம் (தொகுப்பு நூல் ஹைக்கூ 1000)|கனவற்றவர்களின் வாழ்க்கை (புதுக்கவிதை).
இலக்கிய அமைப்பில் பெற்ற விருதுகள்- பரிசுகள்:
- குளத்தில் மிதக்கும் தீபங்கள் (ஹைக்கூ): கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை விருது (2003)
- புல்வெளி ரகசியம் (ஹைக்கூ): ஐயா மாரியப்பனார் சுந்தரம் பால் அறக்கட்டளை, புதுச்சேரி (2008)
- வேட்கையின் நிழல் (புதுக்கவிதை):நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் என்.தங்க முத்து சீதாலட்சுமி நினைவு அறக்கட்டளை விருது, சென்னை (2010)
– ஈரோடு சிகரம் தன் முனைப்புக் அமரர் புலவர் இரா. வடிவேலனார் நினைவு புதுக்கவிதை நூல் போட்டி பரிசு கரூர் (2011)
– தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கம், திருமதி, பழனியம்மாள் அரங்கத்தின் தமிழுக்கு அறக்கட்டளை எட்டையபுரம் (2012)
- பள்ளிக்கூட மைனாக்கள் (சிறுவர் பாடல்கள்): தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமை விருது (2011)
தமிழ் இலக்கிய மற்றும் சமூக சங்க செயல்பாட்டு விருதுகள்:
- தமிழ்நாடு மின்சார வாரியம் பொன்விழா ஆண்டு கவிதை போட்டி பேச்சுப்போட்டி பரிசும், விருதும் (2007)
- மின்சார பூக்கள் (புதுக்கவிதை) – மின்சாரம் குறித்தி ஒருபொருள் கவிதை நூல் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல் தமிழக பாணியில் பாராட்டி, மின் இலக்கிய பூங்கா விருது (2008)
- சிறந்த சமூக சேவைக்கான விருது – அன்னை தெரசா விருது ரெங்கா அக்குபஞ்சர் யோகா மற்றும் சமூக சுகாதார மேம்பாட்டு கல்வி நிறுவனம், சென்னை (2009)
- பெரியார் காமராஜர் பேரவை – சோலையப்பன் பேட்டை கவிதைக்கான “மனிதநேய முரசு” பட்டம் (2010)
- பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு – இலக்கியம் தன்னம்பிக்கை வளர்க்கும் செயல் கட்டுரை மற்றும் இலக்கிய மன்றங்களை அரவணைத்துச் செல்லும் செயல்பாடுகளால் பாராட்டி கவிஞாயிறு தாராபாரதி விருது, நங்கைநல்லூர் சென்னை (2014)
- கவி ஓவிய மாத இதழின் ஆசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி – சிறந்த கவிஞருக்கான விருது, சென்னை (2014)
- முல்லைச்சரம் மாத இதழின் பொன்விழா ஆண்டில் கவிதை பணிகளை பாராட்டி பாரதிதாசன் ஹரிதக் கவிஞர் பொன்னடியார் வழங்கிய – பொன்னொளி கவிஞர் பட்டம் (2016)
- மின் இலக்கிய பூங்காவின் – இலக்கிய திறனாய்வுத் திலகம் விருது (2019)
- கவி ஓவிய மாத இதழின் – எழுத்துச் சிற்பி விருது (2019)
- கவிதை உறவு 49-ஆம் ஆண்டு விழா – கலைமாமணி ஏர்வாடியார் வழங்கிய கவிதைச் செல்வர் விருது, சென்னை (2021)
மின்வாரியப்பணி:
- தாய்வழிக் கல்வியில் அரசுப் பள்ளியிலேயே மகன்களை படிக்க வைத்தது. இன்னும் நிறைய்ய…
படைப்பாற்றல்:
- கவிதை, குழந்தைப்பாடல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம்,கடிதங்கள். பல்வேறு இதழ்களில் பரிசுகள் பெற்றுள்ளன.
சிறப்புக்குரியது:
- குளத்தில் மிதக்கும் தீபங்கள் – குறும்பா கவிதை நூல் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் இளங்கலை தமிழ் முதலாமாண்டுக்கு பாடநூலாக இடம் பெற்றுள்ளது.(2013- 2018)
- கவிதைகள் சென்னைப் பல்கலைக் கழகம் திருவள்ளுவர் பல்கலைக் கழக மாணவர்கள் ஆய்வு செய்து இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள்.
- முனைவர் பட்ட ஆய்வுக்காக இவரது நூல்களை திருவள்ளுவர் பல்கலை கழக மாணவர் ஒருவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
- கூத்துக்கலை – புரிசை கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியில் கூத்துப் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்று பாஞ்சாலிசபதம் கூத்து அரங்கேற்றத்தில் பங்குகொண்டு சான்றும் பெற்றுள்ளார்.
தொழிற்சங்க களமும் இலக்கிய தளமும்:
- மாநில கன்வீனர் – கணக்கீட்டு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக்குழு
- மாநில செயற்குழு – தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு
- மாநிலபொதுச் செயலாளர் – மின் இலக்கியப்பூங்கா
- “தமுஎகச” மாவட்டத் தலைவர் தி.மலை / மாநிலக் குழு உறுப்பினர்
- தொடர்ந்து வந்தவாசியில் திண்ணை அமைப்பிலும் கீழ்க்கொடுங்காலூரில் ”சுற்றம்”அமைப்பிலும் இணைந்து இலக்கிய நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திய அனுபவம்.
- சாகித்ய அகாடமி,தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு இலக்கிய அரங்குகளின் கவியரங்கத்திலும் பங்கேற்ற அனுபவம்
- கவிதைகள்,சாகித்ய அகாடமி தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.
- நூலாசிரியர்கள் வரிசையில் “ஆரிசன்” தலைப்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தனி நூலாக வெளியிட்டுள்ளது
- 34 ஆண்டுகள் மின் வாரிய பணியோடு
- 32 ஆண்டுகள் தொழிற்சங்க பணியும், அதனோடு 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இலக்கியப் பயணம்..
- கவிதை,சிறுகதை,நாவல் குறும்படம்,சங்க இலக்கியம்,சாகித்ய அகாடமி உள்ளிட்டதமிழ் அமைப்புகளின் பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்ட அனுபவம்.
- 2012ம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரைதொடர்ந்து தனது குறும்பா கவிதையினை காலையில் குறுஞ்செய்தி மூலம் 100க்கும் மேற்பட்ட கவிஞர்களுக்கு தொடர்ந்து அனுப்பியவர். (இது உழைப்பின் நிறம் கருப்பு எனும் ஹைக்கூ தொகுப்பாக வெளிவந்து பரிசுகள் பெற்றுள்ளது.)
தொடரும் ஆய்வுகள்:
- கல்வெட்டியல், ஊர் வரலாறுகள் ,சோதிடம், இயற்கை மருத்துவம், அக்கு பஞ்சர் மருத்துவம்.